சிசிரி கமரா விவகாரம்:30கோடி வேண்டுமாம்!

தெல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலய முகாமைத்துவ சபையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தொடர்பிலான செய்திகளை பிரசுரித்த ஊடக நிறுவனமொன்றிடமிருந்து 30கோடி நஸ்ட ஈடு மற்றும் பொது மன்னிப்பு கோர சட்டத்தரணி கடிதமெழுதியுள்ளார்.

ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல் எனும் தலைப்பில் செய்தியொன்று தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

வடமாகாண ஆளுனரினால் வழங்கப்பட்டிருந்த பணிப்பில் சிறுவர் இல்லங்கள் மூடப்பட்டதான அறிவிப்பின் மத்தியில்  வெளியிடப்பட்ட முற்றிலும் பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில் ஈடுபட்டு வரும் தனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும் தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும் தீய நோக்கம் கொண்டதுமாகும் என சட்டத்தரணி குமாரவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்களால் பிரசுரிக்கப்படும்; நாளிதழில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

உரிய காலத்துள் அவற்றினை செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments