நாமலுக்கு காலமிருக்கிறதாம்



பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது கட்சியில் இருந்து போட்டியிட பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகவும், தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments