கைது செய்வார்கள்:முன்னாயத்தமாக சிவாஜி!




மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இலங்கை திரும்பும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறை முற்பட்டுள்ளது..

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிவாஜிலிங்கத்தை கைது செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய இலங்கை காவல்துறை தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி சுவீகரிப்பு தொடர்பாக முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவரை கைது செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருகின்றநிலையில், அவர் விரைவில் நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


No comments