துப்பாக்கிச்சூடு நாடகமா ?
இலங்கை வனவளத்திணைக்க அதிகாரிகளது நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த மணல் விநியோக கும்பல் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர் மீது காவல்துறை நடாத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இன்று மாலை ஒருவர் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி குடமுருட்டி பாலம் அருகில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்த முற்பட்ட வேளையில் டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றமைனாலும் காவல்துறை வாகனத்தையும் சேதமாக்க முற்பட்ட வேலையில் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக தற்பாதுகாப்புக்காக டிப்பர் வாகனம் எது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் காயமடைந்துள்ளார். அத்துடன் இரண்டு பேரை காவல்துறையினர்; கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
எனினும் மணல் திருட்டில் காவல்துறையினரும் தொடர்புபட்ட போதும் கப்பம் தர மறுத்த ரிப்பர் மீதே சூடுநடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
Post a Comment