சொகுசு பேருந்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் , மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் குருநாகல் மெல்சிறிபுர பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment