உலகளவில் 120 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - ஐநா அறிக்கை


2024 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக உலகளவில் 120 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தனர் என ஐநாவின் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகலாலயனம் (UNHCR )  அறிக்கை வெளிப்படுத்துகிறது. 

2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை உலகளவில் 120 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக ஐநா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அகதிகள் , புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்றவர்களின் எண்ணிக்கையைக் கண்காணிக்கும் புள்ளிவிவரங்களைக் கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகலாலயம் உலகளாவிய போக்குகள் அறிக்கையில் புதிய தரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட 10% அதிகம், இது உலக மக்கள்தொகையில் 1.5% ஐ குறிக்கிறது என்று UNHCR தெரிவித்துள்ளது. 

No comments