டென்மார்க் வரித்துறை அமைச்சகத்தில் தீ விபத்து!!


டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் வரி அமைச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவைகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்தன.

கட்டிடத்தின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டிடத்திலிருந்து அடர்ந்த கறுப்பு புகை எழுந்தது.

அமைச்சு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதை முழுமையாக அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு வீரர்களை மேற்கோள் காட்டி டேனிஷ் தலைநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டிடம் கோபன்ஹேகனின் பழைய பங்குச் சந்தையிலிருந்து சுமார் 10 நிமிட நடைப்பயணத்தில் உள்ளது. அதில் பாதி - அதன் சின்னமான டிராகன்-வால் ஸ்பைர் உட்பட - ஏப்ரல் மாதம் தீயினால் அழிக்கப்பட்டது.

No comments