மகிந்தா சீனாவுக்குப் பயணம்!!


நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) காலை சீனாவிற்கு சென்றுள்ளார். 

இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனாவின் எக்சிம் வங்கி உதவியளித்தமை, இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

No comments