மெக்சிக்கோவின் இங்கிலாந்துத் தூதுவர் தூக்கப்பட்டார்
மெக்சிகோவிற்கான பிரிட்டிஷ் தூதர், தூதரக ஊழியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ, ஜோன் பெஞ்சமின் முகம் மங்கலான ஒரு நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவதைக் காட்டுகிறது.
ஏப்ரல் மாதம் துராங்கோ மற்றும் சினாலோவா மாநிலங்களுக்கு உத்தியோகபூர்வ பயணத்தின் போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு, தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தது.
இச்சம்பவம் தொடர்பான செய்தி நிறுவனங்களின் கேள்விகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் பதிலளித்தது: "இந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம், தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். உள் விவகாரங்கள் எழும் போது, FCDO (வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்) தீர்வு காண வலுவான மனித வள செயல்முறைகளைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் சிலி, கானா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
Post a Comment