யேர்மனியில் கத்திக்குத்து: ஐவர் காயம்
யேர்மனியின் மன்ஹெய்ம் நகரில் இஸ்லாமிய எதிர்ப்பு வலதுசாரிக் குழுவான Pax Europa நடத்திய பேரணியில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்வேண்டி இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்திக்குத்து நடத்திய தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த தாக்குதலாளி படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த வழக்கு தற்போது பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment