மகிந்த சீனாவில்:ரணில் கண்டியில்





 தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று    காலை சீனாவுக்குச் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணித்துள்ளார்.

அவர் அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதனிடையே கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா  மகாநாயக்க தேரர் மற்றும்  அஸ்கிரி   மகாநாயக்க    தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதாக கூறப்படுகின்றது.

அதேவேளை ஏனைய கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாகப் போராடுகிறார்கள். நாம் நாட்டுக்காக போராடுகிறோம். அவர்களோ தங்களுக்குக் கிடைக்கும் பதவிகள், பட்டங்கள் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் நாட்டின் வளர்ச்சி பற்றி கனவு காண்கிறோம்.

அவர்கள் அமைச்சுக்களைப் பகிர்ந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். நாம் நாட்டை கட்டியெழுப்ப திட்டங்களை வகுக்கிறோம். அதிகாரத்தைக் கோரி இலங்கையைச் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். உலகம் முழுவதும் பறந்து நாட்டின் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். அதிகாரத்துக்காக அல்லும் பகலும் ஓடித் திரிகின்றனர்.

ஆனால் நாம் நாட்டுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறோம். நாடு முழுதுமாகச் சென்று மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கிறோம். நான் உலகம் முழுவதும் சென்று நமது நாட்டின் வளர்ச்சிக்காக சர்வதேச ஆதரவைப் பெற்று வருகிறேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


No comments