கைதான இந்தியர்கள் யார்?

 


இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சீனர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பெருமளவு இந்தியர்கள் கைதாகியுள்ளனர். தற்போது 60 இந்தியர்கள் தென்னிலங்கையில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே உளவு நடவடிக்கைகளிற்காகவா பெருமளவு இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இலங்கையில் குவிந்துள்ளனர் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கைதானவர்கள் நிதி மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களென தெரிவிக்கப்படுகின்ற போதும் கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள் விடுதலை தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிப்பதாக சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே தெற்கு அரசியல் குழப்ப சூழலின் போது கைதான உளவுத்துறை அதிகாரியொருவரை மனநிலை பாதிக்கப்பட்டவரென தெரிவித்து இந்திய தூதரகம் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments