ஜெயசங்கர் மதிய உணவு சம்பந்தனுடனாம்?

 ஜெயசங்கர் மதிய உணவு சம்பந்தனுடனாம்

மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.தனது மதிய உணவை இரா.சம்பந்தனுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார். 

அதேவேளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளைமறுதினம் வியாழக்கிழக்கிழமை வருகை தரும் போது திருகோணமலைக்கும் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.



திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை ஜெய்சங்கர் ஆய்வு செய்ய உள்ளதுடன், எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்த உள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் ஜெய்சங்கர் கலந்துரையாட உள்ளார்.

குறிப்பாக இந்திய தொழிலதிபர் அதானியின் காற்றாலை மின் உறபத்திக்கு இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு தடை விதித்துள்ளதுடன் மன்னாhரில் கடும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments