விளம்பரப்பலகை அரசியலே ரணிலிடம் உள்ளது!

 


ரணில் விக்கிரமசிங்க அவர்களது வடக்கில் பெயர்பலகைகளை நாட்டும் அரசியலை புரிந்துகொள்ளாத அளவிற்கு வடக்கு தமிழ் மக்கள் முட்டாள்களாவென கேள்வி எழுப்பியுள்ளார் சஜித் பிறேமதாசா.

தனது வடக்கு பயணத்தின் இறுதி நாளான இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் ஊடகவியலாளர்களிடையே பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் வடக்கிற்கான பயணத்தின் போது பெருமளவிலான பெயர்பலகைகளை திறந்து வைத்துவருகின்றார்.ஆனால் அவை என்றுமே பெயர்பலகையாக இருக்கப்போகின்றது.

உதாரணமாக கிளிநொச்சி பூநகரியில் நகரமயமாக்கல் என 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது ஆறு மாதங்கள் அண்மித்துள்ள போதும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமேனும் செலவு செய்யப்படவில்லை.உண்மையில் அதுவே யதார்த்தமாக உள்ளது. 

அவ்வகையில் ஜனாதிபதி சொல்லும் வடக்கின் அபிவிருத்தி என்னவென்பதை புத்தி அறிவுள்ள வடக்கு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

கடந்த 76வருட கால அரசியல் வரலாற்றினில் எதிர்கட்சி தலைவராக இருந்தவாறே வெறுமனே பேசிக்கொண்டிருக்காது பல மில்லியன் நிதியை நான் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கல்வி,மருத்துவம் என செலவு செய்துள்ளேன்.தற்போதைய வடக்கு பயணத்தின் போது கூட பாடசாலைகளில் சிமாட் வகுப்பறைகள்,மாணவர்களிற்கான பேரூந்துகள் வைத்தியசாலைகளிற்கான இயந்திரங்கள் என நான் முன்னெடுத்துள்ள உதவி திட்டங்கள் தொடர்பில் அறிந்திருப்பீர்கள் எனவும் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.

அதேவேளை ரணிலை ஜனாதிபதியாகவும் தங்களை பிரதமராகவும் கொண்ட அரசியல் கூட்டொன்றை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுவதை முற்றாக மறுதலித்த சஜித் பிறேமதாசா மீண்டும் மீண்டும் அது இது தருவாக சொல்லப்படும் அரசியலை ரணிலுடன் இணைந்து முன்னெடுக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

இதனிடையே  13வது திருத்தச்சட்டத்தை ஏற்கனவே அறிவித்தது போன்று அமுல்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லையென தெரிவித்த சஜித் பிறேமதாசா தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே பிளவை தோற்றுவிக்கும் அரசியலை மக்கள் முற்றாக நிராகரிப்பாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


No comments