நாளையும் பாடசாலைகளிற்கு கோவிந்தா?
\
இலங்கையில் ஆசிரியர் போராட்டத்தினால் இன்றையதினம் பத்தாயிரத்திற்கும் அதிகமான அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
எனிறும் நாளையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் மீது இன்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள், வியாழக்கிழமையும் (27) சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்தே நாளையதினம் (27) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .
முன்னதாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் காவல்துறையின் தடையை உடைத்து முன்னேற முற்பட்ட நிலையில் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment