கடற்படை மரணத்திற்கு இலங்கையே காரணம்!
பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிடம் கையேந்தி இலங்கை கடற்படை வீரரை இலங்கை அரசு பறிகொடுத்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் வடமாகாண கட்றறொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் எமது கடற்பரப்பிலே எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்வதற்காக இலங்கை கடற்படை முனைந்தது.அப்போது இலங்கை கடற்படை வீரர் இறந்திருப்பது எமக்கு மிகவும் கவலையையும் மனவருத்தத்தை தருகிறது.
ஆனால் ஒரு நாட்டு கடற்படையுடன் சாதாரணமாக மீனவருடைய படகில் வருபவர்கள் மோதுவது என்பது ஒரு சிறிய விடயம் அல்ல. ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒரு துணிவு இருந்தமையினால் தான் இலங்கை கடற்படையுடன் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இலங்கையினுடைய ஆதரவு பெருவாரியாக தேவைப்படுகிறது. ஆத்தகைய ஆதரவை கொடுக்கின்ற தென்னிலங்கை அரசாங்கம் இந்தியாவை தட்டி கேட்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது.இந்தியாவிடம் கையேந்து நிலை இதற்கு காரணம் ஆகும் . அரசாங்கம் வடக்கில் நடக்கின்ற அந்த விடயங்களை கண்டும் காணாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்
2016 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இந்தியா இலங்கை மீனவருடைய பேச்சு வார்த்தைக்கு தலைமை தாங்கி சென்றவன் அந்த வகையிலே அன்று இந்திய வெளிவிவகார அமைச்சரினால் எடுக்கப்பட்ட ஒரு இணக்கப்பாட்டு அடிப்படையிலே இழுவைமடி தொழிலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த கருத்தை இரண்டு நாடும் ஏற்று இருந்தால் இந்த துர்ப்பாக்கியமான நிலைகள் நடைபெறுவதற்கு சந்தர்ப்பங்கள் இருக்காது.
இன்று கடற்படை சிப்பாயினுடைய இழப்பு எமது நாட்டு அரசாங்கத்தின் அசமந்த போக்கினையும் அக்கறை இல்லா தன்மைக்கும் கிடைத்த ஒரு பரிசாகத்தான் நான் கருதுகிறேன். இதற்கு இலங்கை அரசாங்கமே தவிர வேறு யாரும் காரணம் இல்லை .இந்திய மீனவர்களுடன் வடமாகாண மீனவர்கள் சந்திப்பினை ஏற்படுத்த இந்திய துணை தூதுவரிடம் கோரியும் எந்த பயனும் இல்லை எனவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Post a Comment