இந்தியா தென்னிலங்கைக்கும்!



அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை  வரையான புகையிரத பாதை புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டு   நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. 

வடக்கு ரயில் பாதை புனரமைப்பில் இந்திய அரசின் கடனுதவியின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்ட   இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும்.  மிஹிந்தலை,  ரயில் நிலையம், மிஹிந்தலை சந்தி  நிலையம், சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் இந்த ரயில் பாதையில் அடங்கும்.

 மஹவ- ஓமந்தை திட்டத்தின் நான்கு கட்டங்களில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் புதிதாக சீரமைக்கப்பட்ட அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை  வரையிலான புகையிரத பாதையின் தூரம் 11KM  ஆகும்.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் விசேட நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த அமைச்சர் மற்றும் அதிதிகள் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையிலான புதிய புகையிரத பாதையின் அங்குரார்ப்பண பயணத்தில் இணைந்துகொண்டனர்.

No comments