அண்ணாமலைக்கு அடித்த அதிஸ்டம்!அண்ணாமலைக்கு மத்திய அமைச்சராக பதவியேற்க வரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கின்றது.

இதன்படி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணமலையின் பெயர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் கோவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியை சந்தித்தார்.

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனினும், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.


No comments