வடக்கு பக்கம் சஜித்! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்திற்கான  விஜயம் ஒன்றை மேற்கொண்ட இன்று (09) கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையை  திறந்து வைத்துள்ளார்

இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாண  தேர்தல் மாவட்டத்தில் சில பிரதேசங்களுக்கு சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.

நாளையதினம் (10) பருத்தித்துறை  மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்கவுள்ளார்.

எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை  தொகுதி, கோப்பாய் தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

மேலும், 13ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments