அரச ஊழியர் வாகன பெமிட் கிடையாது?இலங்கையில் பொதுத்துறை ஊழியர்கள் வரியில்லா திட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் உடனடியாக பரிசீலிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு தடை விதித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்த தீர்மானத்தை மாற்றியமைத்து எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் முதல் பல கட்டங்களாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

முதலில் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், பின்னர் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக சிறிய கார்கள் இறக்குமதி செய்யப்படும். இறுதியாக சொகுசு மற்றும் சூப்பர் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசின் கொள்கையாக இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பை பூர்த்தி செய்வதற்காக ஒரு வருடத்தில் இறக்குமதி செய்யப்படும் அதிகபட்ச வாகனங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய வங்கியிடம் அரசாங்கம் ஆலோசனை நடத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.No comments