தங்கம் தேடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம்
புத்தளம் - ஆனமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில், ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி தங்கத்தை தேடி அகழ்வு பணியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Post a Comment