வெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் போதைப் பொருளுடன் கைது
போதைப்பொருள் கடத்திய சென்ற வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்லும்போது நிவித்திகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், இரத்தினபுரி - கலவானை பிரதான வீதியில் கெட்னிவத்தையில் பொலிஸ் வீதித்தடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Post a Comment