ரஷ்யாவில் ஆற்றில் குளித்த 4 இந்திய மாணவர்கள் பலி!!


ரஷ்யாவில் ஆற்றில் குளித்த நான்கு எம்பிபிஎஸ் படித்த மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். நான்கு இந்திய மாணவர்களும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

இச்சம்பவத்தில் ஒரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டார். காப்பாற்றப்பட்ட மாணவிக்கு முறையான மருத்துவ, உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வோல்கோவ் ஆற்றின் இந்திய மாணவி சிக்கியபோது அவரது நான்கு நண்பர்களும் அவரைக் காப்பாற்ற முயன்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினருக்குத் திருப்பி அனுப்புவதைத் துரிதப்படுத்துகிறது.

உயிரிழந்தவர்கள் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெலிகி நோவ்கோரோடில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள்.

No comments