புலிகளின் அன்பு முகாமில் தங்கம் தேடிய பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட ஐவர் கைது


விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த  பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் 

இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments