மீண்டும் சவேந்திரசில்வா:சீற்றத்தில் படைத்தரப்பு!



ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை படைத்தரப்பிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இறுதி யுத்த கால படை அதிகாரிகள் தற்போது 

கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதுடன் தமது தியாகங்களை விற்றுவிட்டதாக படையினர் மதத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.

அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் கடமையாற்றிய ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியபோது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார். 

No comments