தாய்வானைச் சுற்றி வளைத்துப் போர் ஒத்திகையில் சீனா
சீனாவின் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை தைவானைச் சுற்றி அதன் போர் பயிற்சிகளைத் தொடங்கியது. அதிகாரத்தைக் கைப்பற்றும் மற்றும் முக்கிய பகுதிகளைக் கட்டுப்படுத்தும் திறனை சோதித்தது. சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்கள் தீவைச் சுற்றி வளைத்தன.
தைவான் ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-தேவின் சமீபத்திய பதவியேற்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சிகள் நேற்று வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
தாய்வானை சீனா தனது ஒருங்கிணைந்த பிரதேசத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறது மேலும் தைவானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பலத்தை பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை.
நேற்று வியாழன் முதல் வெள்ளி வரையிலான 24 மணி நேரத்தில் 49 சீன போர் விமானங்களையும், 19 கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களையும் கண்காணித்துள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த 49 போர் விமானங்களில், 35 தைவான் ஜலசந்தியின் நடுவில், இரு தரப்புக்கும் இடையிலான நடைமுறை எல்லையில் பறந்தன.
சீன அரசு தொலைக்காட்சி சிசிடிவி படி, சீன இராணுவம் வெள்ளிக்கிழமை அதன் தைவான் பயிற்சியில் தாக்குதல்களை நடத்த நேரடி ஏவுகணைகளை ஏந்தி குண்டுவீச்சுகளை அனுப்பியது.
Post a Comment