ஓயாத மண் களவு!

கிளிநொச்சி அக்கராயனில் உள்ள ஆறு ஒன்று புனரமைக்கப்பட்ட போது பெறப்பட்ட மணலை அமைச்சர் ஒருவரின் கடும் அழுத்தம் காரணமாக முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஒருவர் அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு ஒரு கியூப் மணலை 250 ரூபா வீதம் 342.76 கியூப் மணலை எவ்வித திணைக்கள நடைமுறைகளையும் பின்பற்றாது, சட்டவிரோதமாக விற்பனை செய்த விடயத்தில் பிரதேச சபைக்கு 40 இலட்சத்து 27 ஆயிரத்து 430 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அதற்கு பொறுப்புக் கூறுமாறு குறித்த பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அமைச்சரின் அழுதத்திற்கு பயந்து திணைக்கள நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட அதிகாரி இப்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளார்.



No comments