ஆஸ்திரேலியா விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபர் கைது!
ஆஸ்ரேலியாவில் விமானம் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவர் நிர்வாணமாக ஓடியுள்ளார். அத்துடன் விமானப் பணியாளர் ஒருவரை தள்ளி வீழ்த்தியுள்ளார்.
இதனால் பெர்த்தில் இருந்து மெல்போர்னுக்குச் சென்ற VA696 விமானம் திங்கட்கிழமை இரவு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பெர்த்தை அடைந்ததும், நிர்வாணமாக ஓடியவரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் விமாத்திலிருந்து இறக்கிக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் மனநிலை குறித்து அறிவதற்கு அவரை மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் ஜூன் 14 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அவர் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்கிறோம் என்று விர்ஜின் ஆஸ்திரேலியா கூறியது.
Post a Comment