பிரான்சில் சிறை வாகனம் மீது தாக்குதல்: இரு அதிகாரிகள் பலி! கைதி தப்பியோட்டம்!!
பிரான்ஸ் நோர்மண்டியில் உள்ள ரூவென் அருகே சிறைக்கான சிற்றூர்தி மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பிரஞ்சு சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்.
துப்பாக்கி ஏந்திய தாக்குதலாளிகள் மகிழுந்தில் கைதியுடன் தப்பிச் சென்றுள்ளனர் என பிரஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை Rouen இல் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட பின்னர், Évreux நகரில் உள்ள சிறைச்சாலைக்கு கைதி மீண்டும் கொண்டு செல்லப்பட்டபோது இச்சம்பவம் நடந்தது.
A154 நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சுங்கச்சாவடிக்கு அருகில் 11:00 மணியளவில் (09:00 GMT) பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டு வாகனங்களில் சிறைத் தொடரணியை அணுகிய ஆயுததாரிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment