சொந்த ஊரில் மறைந்த ஈரான் அதிபர் அடக்கம்


மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அடக்கம் ஈரானின் புனிதமான ஷியா முஸ்லிம் தளத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக மற்றொரு இறுதி ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

ஈரான் தனது மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்குகளின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை கிழக்கு நகரமான பிர்ஜாண்டில் இறுதிமரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானிய அதிபர் ரைசி அவரது வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆறு பேருடன் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

நாட்டின் வடகிழக்கில் உள்ள அவரது சொந்த நகரமான மஷாத்தில் உள்ள இமாம் ரேசாவின் புனித ஆலயத்தில் பிற்பகலில் அடக்கம் செய்யப்பட உள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஷஹர்-ரே நகரில் உள்ள ஷா அப்தோல்-அசிமின் சன்னதியில் இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுவார்.


No comments