செல்வம் ஆராய்கிறார்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது ஒற்றுமையாக தமிழ் கட்சிகளை அணிதிரட்டுகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதோடு தேசியத்தினை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளினை உள்வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கின்றோம்.
அந்த வகையிலே எமது மக்களிற்காகவும், மண்ணிற்காக துப்பாக்கி ஏந்திய நாம் எம் மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் செயற்பாட்டினை தொடர்ந்து செய்வோம்.
Post a Comment