பல்கலை,அல்லைப்பிட்டியென எங்கும் கஞ்சி !
பல்கலை,அல்லைப்பிட்டியென எங்கும் கஞ்சி !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களாலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்று திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சாட்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவை கடத்தும் வகையில் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை தீவகப்பகுதியினில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அல்லைப்பிட்டி சேமக் காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இலங்கை படையினரால் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவாகவே அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment