''பெண்களைப் போல் வாகனங்களை ஓட்டுங்கள்'' என வலியுறுத்தும் பிரான்ஸ் பிரச்சாரங்கள்!
பெண்களைப் போல் வாகனங்களை ஓட்டுங்கள் எனும் பிரச்சாரம் பிரான்சில் வலியுறுத்தப்படுகிறது.
பெண்களை விட ஆண்களே பாதுகாப்பான ஓட்டுநர்கள் என்ற கருத்து சமூகத்தில் உள்ளது. ஆனால் பிரான்சின் சாலை விபத்துக்களின் புள்ளி விபரங்கள் வேறுவிதமான கருத்தை பிரதிபலிக்கின்றன.
இப்பிரச்சாரம் பிரான்சில் ஒன்லைனில் ''பெண்களைப் போல் ஓட்டுங்கள்'' என ஆண்களுக்கு வலிறுத்தும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2022-2023 ஆம் ஆண்டில் 84% அபாயகரமான கார் விபத்துக்கள் ஆண்களால் ஏற்படுகின்றன என்று பிரெஞ்சு சாலை பாதுகாப்பு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மது போதையில் 93% விபத்துகளுக்கு ஆண்களே காரணம் என்றும் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
இப்புள்ளி விபரங்கள் ஆண்கள் பாதுகாப்பான ஓட்டுநர்கள் என்ற பொதுவான கருத்தை மறுக்கிறது.
அத்துடன் பெண்கள் வாகனத்தை ஓட்டும் பாணியை ஏற்றுக்கொள்வது மக்கள் உயிருடன் இருக்க உதவும் என்ற கருத்தை ஒன்லைன் மூலம் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள் வெளிவருகின்றன. இதே பிரச்சாரங்கள் மெட்ரோ நிலையங்களின் விளப்பரப் பலகைகளிலும் டிஜிட்டல் திரைகளிலும் காணலாம்.
Post a Comment