கைபேசியை சார்ஜில் போட முனைந்த 05 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


களுத்துறை  - மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments