டயானாவிற்கு எதிரான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியுமா?


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

டயானா கமகேவுக்கு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்பதால், அதனை பூரண நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பு தொடர்பில் டயானா கமகேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

"அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது, பூரண உயர் நீதிமன்ற அமர்வில் கோரிக்கை விடுப்பதற்கு.

ஏனெனில் மூன்று பேர் கொண்ட அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை பூரண அமர்வில் சவால் செய்யலாம்.

அவருக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அக்கட்சியைச் சேர்ந்த எவரும் தேசியப்பட்டியலில் இருந்து வரலாம்.

எனவே இந்த இரண்டில் எது முதலில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்

No comments