மரண சடங்கில் மின் விளக்குகளை பொருத்திக்கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


கம்பஹா - நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் மரண சடங்கு நடக்கும் வீட்டின் சூழலில் மின் விளக்குகளை பொருத்திக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திஹாரிய கல்கெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரணசடங்கு நடைபெறும்  வீட்டின் சூழலில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

வீதியில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பி மோதியதில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய ஏனைய நால்வரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments