ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவிப்பு


ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்தது. 

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி இக்கருத்தினை செய்யாளர்களிடம் பேசும் போது கூறினார்.

இந்த வார இறுதியில் ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்கிறார். அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பரிசீலிப்பதாக ஹலேவி கூறுகிறார்.

தெஹ்ரான் இஸ்ரேலை நோக்கி 300க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதற்கு அதன் பதிலை பரிசீலிக்க இஸ்ரேலின் போர் அமைச்சரவை கூடிய பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

No comments