நெதன்யாகு காசாப் போரில் தவறு செய்கிறார் - ஜோ பிடன்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவைக் கையாள்வதில் தவறு செய்கிறார் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் ஒரு செவ்வியில் கூறினார்.

காசா போரில் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார் என்று நினைக்கிறேன். போரை அவர் கையாளும் விதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது.

காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும். காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்லவிடாமல் இஸ்ரேல் தடுக்கிறது. நிவாரண பொருட்கள் விநியோகத்தையும் தடுக்கிறது எனக் கூறினார்.

காசாவிற்குள் உதவி அல்லது அதன் விநியோகத்தை தடை செய்வதை இஸ்ரேல் மறுத்துள்ளது, மேலும் தேவைப்படும் மக்களுக்கு அனுமதிக்கப்படும் உதவிகளைப் பெறத் தவறிவிட்டதாக ஐ.நா முகமைகளை குற்றம் சாட்டியது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க பல வாரங்களாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தாலும் சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது.

No comments