ஆளுநர்களிற்கு மாற்றம்



ஜனாதிபதி தேர்தல் முன்னதாக மாகாண ஆளுநர்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

வடமேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லக்ஸ்’மன் யாபா அபேவர்தனவை தென் மாகாண ஆளுநராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாபா அபேவர்தனவை நியமித்ததன் பின் வெற்றிடமாகும் வடமேற்கு மாகாண புதிய ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டை தெரிவு செய்யவுள்ளதாவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது தென் மாகாண ஆளுநராக இருக்கும் விலீ கமகேவை இம்மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்கி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பசில் ராஜபக்சவும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மொட்டுக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளாராக கடமை புரியுமாறு பசிலிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே விலீ கமகே ஆளுநர் பதவியிலிருந்து விலக இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி செயலகத்தையும் முழுமையாக புனரமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது


No comments