சூரிய கிரகணத்தைப் பார்வையிட்ட இலட்சக்கணக்கான மக்கள்!!
வட அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோ, அமெரிக்கா மற்றும் கனடா வாழ் மக்கள் இன்று திங்கட்கிழமை பகல் இராவாக மாறும் சூரிய கிரகணத்தைப் பார்த்தனர். இந்த நிகழ்வைக் காண இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஒன்றுகூடினர்.
சூரிய கிரகணம் முதன்முதலில் மெக்சிகோவின் மசாட்லான் பகுதியில் உள்ளூர் நேரப்படி 11:07 மணிக்கு தென்பட்டது. முதலில், சந்திரனின் வெளிப்புற விளிம்பு சூரியனைத் தொடுவது போல் தோன்றியது. பின்னர் சந்திரன் சூரியனை மறைக்கும் போது சந்திரனின் விழிம்பில் வெள்ளி வளையம் போல் சூரியன் காட்சியளித்தது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் கடக்கும் போது சூரிய ஒளியைத் தடுக்கும் போது முழு கிரகணம் உருவாகிறது.
வட அமெரிக்கா முழுவதும் சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் கடக்கும் போது வானம் சில நிமிடங்களுக்கு இருண்டது.
சூரியனை நேரடியாகப் பார்க்காமல் கண்களைப் பாதுகாக்க சிறப்பு கிரகண கண்ணாடிகளைப் பயன்படுத்தினர்.




Post a Comment