பனாமா பேப்பர்ஸ்: உலக பிரபலங்களின் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
பனாமா பேப்பர்ஸ் (Panama Papers ) வரி ஏய்ப்பு ஊழலில் தொடர்புடைய 27 பேர் தொடர்பான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை பனாமா குற்றவியல் நீதிமன்றில் ஆரம்மாகியது. இந்த விசாரணைகள் எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியது.
பனாமா பேப்பர்ஸில் கசிந்தது என்ன?
2016 ஆம் ஆண்டில், 11.5 மில்லியன் இரகசிய நிதி ஆவணங்கள் ஜெர்மன் செய்தித்தாள் Süddeutsche Zeitung (SZ) இல் கசிந்தன.
உலகின் எத்தனை பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களில் பதுக்கி வைத்துள்ளனர் என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தின.
ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதமர் சிக்முண்டூர் குன்லாக்சன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முன்னாள் பிரித்தானியா பிரதமர் டேவிட் கேமரூன், கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் அப்போதைய ஜனாதிபதி மொரிசியோ மக்ரி மற்றும் ஸ்பானிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் பெட்ரோ அல்மோடோவர் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளில் யேர்மனியில் பிறந்த ஜூர்கன் மொசாக் மற்றும் 2016 இல் ஆவணக் கசிவின் மையத்தில் இருந்த பனாமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ரமோன் பொன்சேகா ஆகியோர் அடங்குவர்.
ஜேர்மன் வழக்குரைஞர்கள் 2020 இல் மொசாக் மற்றும் பொன்சேகாவிற்கு வரி ஏய்ப்பு மற்றும் ஒரு குற்றவியல் அமைப்பை உருவாக்குவதற்கான துணைக் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச கைது வாரண்ட்களை பிறப்பித்தனர்.
இருப்பினும், மொசாக் மற்றும் பொன்சேகா ஆகிய இருவருக்குமே பனாமா குடியுரிமை உள்ளது. பனாமா தனது சொந்த குடிமக்களை ஒப்படைக்கவில்லை.
எனவே விசாரணைக்காக ஜெர்மனிக்கு அழைத்து வரப்படுமா என்பது தெளிவாக இல்லை.
Mossack, Fonseca மற்றும் சட்ட நிறுவனத்தின் மற்ற முன்னாள் ஊழியர்கள், சட்ட நிறுவனம் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Post a Comment