விகாரையில் இருந்து அடிகாயங்களுடன் சடலம் மீட்பு


கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார்.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்தவரின் கை, கால்கள்  கயிற்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலத்தில் பாரிய காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில் விஹாரையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலாளி ஒருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments