உலகின் வயதான மனிதன் உயிரிழந்தார்!


உலகின் மிக வயதான மனிதரான வெனிசுலாவில் வசிக்கும் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 114 வயதில் இறந்தார். அவரது 115 வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துள்ளார்.

இவரது வயது உலக சாதனை கின்னஸ் பட்டியலில் உறுதிசெய்யபட்டது. இவர் இரண்டு உலகப் போர்களிலும் வாழ்ந்தவர்.

பெரெஸ் மோரா 1909 ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி வெனிசுலாவில் Euquitio Pérez மற்றும் Edelmira Mora ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். மற்றும் அவர் இறக்கும் போது தாச்சிரா மாநிலத்தில் வசித்து வந்தார்.

ஜுவான் விசென்டே பெரெஸ் மோராவுக்கு பதினொரு குழந்தைகள். இதில் ஆறு ஆண் பிள்ளைகளும் ஐந்து பெண் பிள்ளைகளும் அடங்குவர். இவர் எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியாவைத் திருமணம் செய்து அவர் இறக்கும் வரை 60 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார். இவரது மனைவி 1997 ஆம் ஆண்டு இறந்தார்.

இவருக்கு 42 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் நான்காவது தலைமுறையான 12 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இருந்தனர்.

ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா அடக்கமான, கடின உழைப்பாளி, அமைதியான, குடும்பம் மற்றும் பாரம்பரியத்தின் மீது ஆர்வமுள்ளவர்.

இவர் கடினமாக உழைத்து, விடுமுறை நாட்களில் ஓய்வெடுத்தல், வேளைக்கு உறங்கச் செல்வது, தினமும் ஒரு கிளாஸ் அகார்டியன்ட் மதுபானம் குடிப்பது, கடவுளை நேசிப்பது இவையே என்று தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் எனக் கூறியிருந்தார்.

ஜுவான் விசென்டே 2020 இல் தொடங்கி காெரோனா தொற்று நோயிலிருந்து உயிர் தப்பினார்.

வெனிசுலாவின் முதல் முழு அங்கீகாரம் பெற்ற சூப்பர் சென்டெனரியன் மனிதரின் நம்பமுடியாத நீண்ட ஆயுளை அங்கீகரிப்பதும் கொண்டாடுவதும் ஒரு மரியாதை என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் ஆசிரியர் இன்-சிஃப் கிரேக் க்ளெண்டே கூறினார்.

தற்போதைய வரலாற்றில் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நான்காவது வயதான ஆணாக இருக்கிறார். இவருடைய வயது வயது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments