25 வருடங்கள் இல்லாதளவு நிலநடுக்கம்: பல கட்டிடங்கள் சரிந்தன

இன்று புதன்கிழமை காலை தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 800 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் ஹுவாலியன் கவுண்டிக்கு தென்கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது எனத் தெரிவித்தது.
நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அத்துடன் பல கட்டிடங்கள் சரிந்து காணப்படுகின்றன.
ஹுவாலியன் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறைந்தது 26 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறைந்தது 127 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஒரு இடத்தில் 60 பேர் சிக்கியுள்ளனர்.
இரண்டு ஜேர்மனியர்கள் தாரோகோ தேசிய பூங்காவில் ஒரு தனி நிலத்தடியில் சிக்கினர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.
Post a Comment