அம்பாறை மாவையாலேயே பறிபோனது!



1994 ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதி நிதித்துவத்தை இழப்பதற்கும்  அங்குள்ள தமிழ் மக்களின்   வாக்குகளை பிரிப்பதற்காகவும்  யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாவை சேனாதிராஜா  தான் காரணம் என கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர்   கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது  நாளாக இன்று(8)     கவனயீர்ப்பு    போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் பாண்டிருப்பு பகுதியில்   இடம்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் சிலர் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு குளிர் காய பார்க்கின்றார்கள்.தற்போது அப்போராட்டத்திற்கு வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலர் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கருணர் தேர்தலில் போட்டியிட்டு இல்லாமல் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.அதாவது 2020 ஆம் ஆண்டு கருணாவிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் 31 000 க்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கி இருந்தார்கள்.

அவ்வாறு கருணா அம்மானிற்கு வாக்குகளை மக்கள் அள்ளி வழங்க காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரையே சாரும்.1977 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை மக்கள் தமிழ் அரசுக்கட்சிக்கே அதிகளவாக  வாக்களித்து வந்திருக்கின்றார்கள்.ஆனால் அக்காலப் பகுதியில் மக்களிற்கு எவ்வித நன்மைகளும் தமிழரசுக் கட்சியினால் கிடைக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த 2009 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்த வந்திருக்கின்றார்கள் எனவும் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments