ஈரானின் நிழல் யுத்தம் தொடங்கியதா? இஸ்ரேல் மீது தாக்குதல்களை அதிகரித்தது ஹிஸ்புல்லா!!


எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் மீதான ஈரானின் நிழல் யுத்தல் ஆரம்பமாகியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டைகளில் ஒன்றான தென்கிழக்குப் பகுதியிலிருந்து இன்று சனிக்கிழமை இல்ரேல் நோக்கி பல வான்வழித் தாக்குதல்களை ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தியது.

இஸ்ரேலின் இலக்குகள் மீது 40க்கு மேற்பட் ரொக்ட்டுக்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இஸ்ரேலுக்குள் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தேசவிபரங்கள் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இதேநேரம் இஸ்ரேலும் ஐந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இராணுவ வளாகம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அங்கு இதுவரை இல்லாத அளவு பதற்றம் நிலவி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை தீவிரமடைந்து வருகிறது. அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரான் தூதரக கட்டிடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குலில் இராணுவ ஜெனரல்கள் கொல்லப்பட்டதற்கு ஈரானிய பதிலடியை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

No comments