அமைச்சர் விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?


அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை நடத்தும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போது வேறு கட்சியில் அங்கத்துவம் பெற முடியாது எனவும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தால் பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இனியும் இருக்க முடியாது என காரியவசம் கூறியுள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், விஜயதாச ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை இழந்தால், அது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சவாலாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments