கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்


கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ எனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்தார். 

ஆனால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டது. 

இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை என மேலும் தெரிவித்தார். 

No comments