மொஸ்கோ தாக்குதலாளிகள் கைது!!
மொஸ்கோ சிற்றி ஹால் இசையரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 133 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். கட்டிடத்தில் மேற்கூரைகள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் இருந்தும் பலர் மீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து வெள்ளை நிற மகிழுந்தில் தப்பிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று பிரையான்ஸ்க் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். இவர்கள் உக்ரைன் எல்லை நோக்கி தப்பிக்க ஓடினர்.
காவல்துறையினர் மறித்த போது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். காவல்துறையினருக்கும் ஆயுததாரிகள் உனக்கும் இடையில் நடந்த சண்டையில் இருவர் அந்த இடத்தில் கொல்லப்பட்டனர். தப்பிய இருவர் காட்டுக்குள் தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இத்தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் சில தொடர்புகள் இருந்துள்ளதாகவும், அவர்கள் ரஷ்யாவின் எல்லையை கடந்து உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி தெரிவித்துள்ளது.
மகிழுந்தில் இருந்து நால்வரும் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இது ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அரசின் கிளை அமைப்பாகும்.

Post a Comment