மொஸ்கோ தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்வு


ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் புறநகரில் அமைந்த குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.

மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கச்சேரி அரங்கில் துப்பாக்கி ஏந்திய நபர்கள், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஷ்யாவின் ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி சென்றதாக ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவை கூறுகிறது. குற்றவாளிளுக்கு உக்ரைனுடன் தொடர்பு இருப்பதாக பாதுகாப்புச் சேவை கூறுகிறது.

சந்தேகத்தின் பெயரில் 11 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இதில் தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரும் அடங்குவதாக ரஷ்ய பாதுகாப்பு சேவை இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

குரோகஸ் சிட்டி ஹாலில் தானியங்கி ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிகள், கட்டிடத்திற்கு தீ வைக்க எரியக்கூடிய திரவத்தையும் பயன்படுத்தியதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் வெள்ளிக்கிழமையன்று, கியேவுக்கும் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் இத்தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை ரஷ்யா நம்ப மறுக்கிறது.

தாக்குதல் குறித்து ரஷ்யா விசாரணைகளைத் தொடங்கு முன்பே மேற்கு நாடுகளின் ஊடகங்கள் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

மொஸ்கோ நகரமும் பிராந்திய அரசாங்கங்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதாகவும், இறுதிச் சடங்குகளுக்கு பணம் செலுத்துவதாகவும் தெரிவித்தன

மாஸ்கோவில் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவிடம் இருந்து ரஷ்யா உளவுத்துறை எச்சரிக்கையைப் பெற்றது, ஆனால் அந்த தகவலில் குறிப்பிட்ட தகவல்கள் இல்லை எனவும் ரஷ்யப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதலுக்கு ரஷ்யாவை எதிர்த்து நிற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நோர்வே என அனைத்து மேற்குலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்தன.

இதேபோல் ரஷ்யாவுடன் நல்ல உறவுகளில் இருக்கும் சீனா, இந்தியா உட்பட பல நாடுகளும் இத்தாக்குலைக் கண்டித்துள்ளன.

No comments